வல்வை இளங்கதிர் விளையாட்டு கழகம் நடாத்தும் ஒரு நாள் உதைபந்து சுற்றுப்போட்டி :ரேவடி உதயசூரியன் அரையிறுதிக்கு தகுதி
வல்வை இளங்கதிர் விளையாட்டு கழகம் நடாத்தும் ஒரு நாள் உதைபந்து சுற்றுப்போட்டி தீருவில் இ.வி கழக மைதானத்தில் இன்று (24.01.2015)நடைபெற்று வருகின்றது.
முதல் போட்டியில் நேதாஜி விளையாட்டு கழகத்தை எதிர்த்து ரேவடி விளையாட்டு கழகம் மோதியது இரு அணிகளும் கோல் எதுவும் போடாதநிலையில் ஆட்டம் முடிவடைந்தது இதனை தொடர்ந்து சமநிலை தவிர்ப்பு உதையில் ரேவடி 2- 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டியின் ஆட்டநாயகனாக சி .தர்சன் தெரிவு செய்யப்பட்டர்
இரண்டாவது ஆட்டத்தில் உதயசூரியன் விளையாட்டு கழகத்தை எதிர்த்து இளங்கதிர் விளையாட்டு கழகம் மோதியது விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டதில் இரு அணிகளும் ஆட்ட நேர முடிவில் தலா இரண்டு கோல் போட்டு சமநிலை வகித்தது. சமநிலை தவிர்ப்பு உதையில் உதயசூரியன் 4- 3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.போட்டியின் ஆட்டநாயகனாக வசந்தன் தெரிவு செய்யப்பட்டர்
மூன்றாவது போட்டியில் றெயின்போ விளையாட்டு கழகத்தை எதிர்த்து தீருவில் விளையாட்டு கழகம் மோதவுள்ளது.
போட்டி தொடர்பான மேலதிக செய்திகளுக்கு எம்முடன் இணைந்திருங்கள்


















