வடக்கின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக விளங்கும் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக, வடக்கு மாகாண விவசாய அமைச்சு ஆண்டுதோறும் தைப்பொங்கல் தினத்தையொட்டி உழவர் பெருவிழாவை நடாத்தி வருகிறது.
யாழ்மாவட்டத்தின் சிறந்த பாற்பசுப் பண்ணையாளராக வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திரு.நாகேஸ்வரன் ரவி அவர்கள் வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டு கடந்த 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற உழவர் பெருவிழாவில் விருதுகள் மற்றும் பணப்பரிசும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
மானாங்கானையில் உள்ள இவரது பண்ணியல் 25ற்கு மேற்ப்பட்ட பசுக்களை வளர்த்துவருவதோடு, அவற்றிக்கான தீவணங்களை இயற்கை முறையில் தயாரித்து வருகிறார். இதற்காக தனது தோட்டத்தில் புற்களை பெருமளவில் வளர்த்து வருகின்றார்.

யாழ்மாவட்டத்தின் சிறந்த பாற்பசுப் பண்ணையாளராக வல்வையை சேர்ந்த திரு.ரவி தெரிவு செய்யப்பட்டுள்ளார்

















Leave a Reply