Search

சிதம்பராக் கல்லூரியில் பௌதீகவியல், உயிரியல் ஆய்வுகூடங்கள் புனரமைப்பு.(படங்கள் இணைப்பு)

 

யாழ் வல்வை சிதம்பரக் கல்லூரியில்  கடந்த பல ஆண்டுகளின்  மேலாக இயங்க முடியாத நிலையிலிருந்த பௌதீகவியல்,  உயிரியல் ( மற்றும்   இரசாயனவியல் – கூடிய விரைவில்  ) ஆய்வுகூடங்களின் புனரமைப்பு வேலைகள்  துரிதமாக நடைபெறுகின்றது.
சிதம்பராக் கல்லூரியானது 1985 இற்கு முற்பட்ட காலப்பகுதிகளில், யாழ் மாவட்டத்திலேயே முன்னணித் தரத்திலான விஞ்ஞான ஆய்வுகூட வசதிகளை கொண்டிருந்தமையும், பல பட்டதாரிகளையும், சமூகத்திற்காக உழைக்கும் கரங்களையும் உருவாக்கியமை குறிப்பிடத்தக்கது.
தற்போது புலம்பெயர் வாழ் சிதம்பராவின் பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் ,
வல்வை பழைய மாணவர் சங்கம், அதிபர், ஆசிரியர்கள்  பெற்றோர்கள்  மற்றும் உலகெங்கிலும் வாழும்  தமிழ் உள்ளங்களின்  ஆதரவுடன் மீண்டும் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
விவரங்களை http://www.chithambaracollege.com என்ற எமது CWN இணைய தளத்தில் பார்வையிடலாம்.
கல்வியே எமது கண். எமது மாணவரின் வருங்காலமே எமது நோக்கு.
எம்முடன் கூடி நேசமுடன் சுயநலமின்றி பாகுபாடின்றி பணி புரிய விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புகட்கு: 0789 154 7784.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *