சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இணையத்தில் தாக்குதல் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
சிரியாவில் புரட்சிபடையினர் வசமுள்ள பகுதிகளை மீட்பதற்காக இராணுவத்தினர் வான்வழி தாக்குதல்களை நடத்துகின்றனர்.
இதில் நேற்று நடந்த தாக்குதல்களில் மட்டும் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் டமாஸ்கஸ் மற்றும் அலெப்பா பகுதிகளில் நடந்த தாக்குதல்கள் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு காட்சியில் டமாஸ்கஸின் மோடாமியே பகுதியில் ரஷ்யாவின் மிக் போர் விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.