இன்று வல்வை சிவகுரு வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வன்மைப் போட்டி, இன்று சனிக்கிழமை (16.02.2013 ) சிதம்பரா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் 1.30 மணியளவில் பாடசாலை அதிபர் திரு ஆ.சிவநாதன் அவர்கள் தலைமையில் ஆரம்பமானது. இவ் இல்ல மெய்வன்மைப் போட்டிக்கு, பிரதம விருந்தினராக திரு அழகேஸ்வரர்சாமி ஸ்ரீகரன் (பிரதிக் கல்விப் பணிப்பாளர் முகாமைத்துவம், வலய கல்வி அலுவலகம், வடமராட்சி) அவர்களும் ,சிறப்பு விருந்தினராக திரு சதானந்தம் சர்வானந்தன் ( முகாமையாளர், மக்கள் வங்கி வல்வெட்டித்துறை) கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இவ் விளையாட்டுப் போட்டியில் ஆண், பெண்களுக்கான அணிநடை, ஓட்டம் ,தடை ஓட்டம், சிறுவர்களுக்கான விளையாட்டு ,அஞ்சல்ஓட்டம் என அனைத்து விளையாட்டுகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றன.
மேல் பிரிவு மாணவ, மாணவிகளினதும், கீழ்ப் பிரிவு மாணவ, மாணவிகளினதும் இசையும், அசைவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மற்றும் பழைய மாணவர்களின் விளையாட்டுகளும் நடைபெற்றன.
இவ் விளையாட்டுப் போட்டிகளை அதிக எண்ணிக்கையானோர் பார்க்க கூடியிருந்தது குறிப்பிடத்தக்கது.