வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தின் பராபவ வருட மகோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்வு இன்று (19.08.2026) பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

சிறப்பு பூஜைகள் மற்றும் சமய சடங்குகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, ஆலயத்தில் கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆலய நிர்வாகத்தினர், சிவாச்சாரியார்கள் மற்றும் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை வழிபட்டனர்.

கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ திருவிழா நாட்களில், பல்வேறு சமய நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.