Search

நானும் சிதம்பராவும்………..

நூறுஆண்டுகள் கடந்த அந்த கல்விஆலயம் இன்னும் பல சொல்லமுடியாத வரலாறுகளை தனக்குள்;ளே தாங்கியபடி நிமிர்ந்துநிற்கிறது.எமது ஊரின் கல்விஆலயங்களில் முதன்மையானது.

எமது முந்தைய மூத்ததலைமுறைகள் இங்குதான் தமது கல்வியை,தொழிலுக்கான ஆதாரத்தை,
இலட்சியத்துக்கான முதல்விதைகளை பெற்றுக்கொண்டார்கள்.

இங்கிருந்தே ஒரு தொன்மை இனத்தின் வரலாற்றை மாற்றி அதனை வீரஇனமாகவும் விடுதலைக்காக எதையும் செய்யத்துணிந்த இனமாகவும்,உலகஅரங்கில் ஒரு இனத்தின் முகவரியாக விளங்கியவர்கள் புறப்பட்டும் வந்துள்ளார்கள்.

அதனைப்போன்றே சிந்தனைமிக்க கல்வியாளர்களும்,துறைசார் அறிஞர்களும்,தொழில்அதிபர்களும்,கலைஞர்கள் பலரும் இங்கிருந்தே தமது பயணத்தை ஆரம்பித்தார்கள்.

அவர்களை உருவாக்கிய அறிவுக்கருவறை இது.இதனுடனான அவர்களின் நினைவுகளும்,
இது அவர்களை உருவாக்கிய முறைபற்றிய எண்ணங்களும் பகிரப்பட வேண்டியவையே.
அதன்ஒரு அங்கமாகவே இந்த தொடர்ஆரம்பமாகிறது.

எனவே உறவுகளே,உங்களை எந்தவிதத்தில் இந்த கல்லூரி உருவாக்கியது.அதன் ஆசிரியர்கள்,அதன் சாரணர்பயிற்சிகள்,கலைநிகழ்வுகள்,மெய்வல்லுநர் பயிற்சிகள் என்று அனைத்தையும் உங்கள் பார்வையில் எழுதி அனுப்புங்கள்.

கல்லூரிசார்ந்த நினைவுபுகைப்படங்கள் இருந்தால் அதனையும் அனுப்பிவையுங்கள்.
தமிழில் கணணியில் தட்டச்சுசெய்வது சிரமமாக இருந்தால் தயவுசெய்து கையால்எழுதி அனுப்புங்கள்.நாம் தட்டச்சுசெய்து பதிவேற்றுவோம்.

இதன் தலைப்பு சிதம்பராவுடன் என்று இருந்தாலும் நீங்கள் படித்த பாடசாலை எதுவாக இருந்தாலும் அதனை பற்றிய உங்கள் நினைவுகளையும் வரவேற்கிறோம்.

கல்லூரி என்பது தனித்து சீமேந்தால் மண்ணால் உருவான கட்டடம்அல்ல.அதனுள் ஆழமாக எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் உயிர்மூச்சு கல்வி,அறிவு,ஆற்றல் என்பனவே.
கல்லூரியின் இரைச்சல் சத்தத்துக்குள் உயிரோட்டமாக நீந்திக்கொண்டிருக்கும் சந்தோச தருணங்கள்,மலரும்நினைவுகள்,நட்பின்ஆழங்கள் இவைகளை பற்றியும் எழுதுங்கள்.
நன்றி
அனுப்பும் முகவரி: vvtuk26@gmail.com

vvtmuthu@hotmail.co.uk




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *