





தமிழ் தேசிய வீரர்கள் தினம்
தலைவர் தங்கத்துரை தளபதி குட்டிமணி
ஆடி.25 – ஆடி.27. 37ம் ஆண்டு நினைவு நாள் 25.07.2020
நாம் வன்முறை மீது காதல் கொண்டவர்களோ, அது போன்ற மன நோயினால் பாதிக்கப்பட்டவர்களோ அல்லர்.
மாறாக ஒரு தேசத்தின் விடுதலைக்காக போராடும் உண்மையான போராளிகள்
– தலைவர் தங்கத்துரை –
ஒரு குட்டிமணியை தூக்கிலிடுவதன் மூலம்
ஆயிரம் குட்டிமணிகள் தோன்றுவார்கள்.போராடுவார்கள்.
இந்த நீதிமன்றத்தால் அதை தடுக்க முடியாது”
– தளபதி குட்டிமணி –
குட்டிமணி என அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன்[1] (இறப்பு: சூலை 25, 1983) என்பவர் முன்னாள் தமிழீழப் போராட்ட இயக்கமான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர். இவர் இலங்கைக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டார். கொழும்பு சிறையில் இவர் காவலில் வைக்கப்பட்டிருந்த போது, 1983 ஆம் ஆண்டில் வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள் இடம்பெற்ற போது சிங்கள கைதிகளினால் மற்றொரு டெலோ தலைவர் நடராஜா தங்கத்துரையுடனும், மேலும் 51 தமிழ்க் கைதிகளுடனும் சேர்த்துப் படுகொலை செய்யப்பட்டார்
இந் நாளில் இனவாத அரசினால் படுகொலை செய்யப்பட்ட அனைத்து போராளிகளுக்கும் அப்பாவி பொது மக்களுக்கும் எமது வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்ளுகிறோம்.













Leave a Reply