பூனை உடலுடன் வாழும் சீனச்சிறுமி..! (படம்,வீடீயோ இணைப்பு)

பூனை உடலுடன் வாழும் சீனச்சிறுமி..! (படம்,வீடீயோ இணைப்பு)

பூனை உடலுடன் வாழும் சீனச்சிற��

சீனாவின் சனத்தொகை எவ்வாறு அதிகரித்து காணப்படுகிறதோ அதே போல் அங்குள்ள மக்களுக்கும் பல்வேறு விசித்திரமான நோய்கள் காணப்படுகிறது. பிறக்கும் போது சில

குழந்தைகளுக்கு மச்சம் எனப்படும் கறுப்பு அடையாளம் காணப்படுவதுண்டு. சில குழந்தைகளுக்கு அது சற்று பெரிதாகவே காணப்படும். அது போல் சீனாவில் ஒரு பெண்ணுக்கு உடலின் முதுகு கை முகம் போன்ற பகுதிகளில் கறுப்பு மச்சம் போலவும் புனையின் ரோமம் போலவும் காணப்படுகிறது.

சீனாவின் தெற்குப்பகுதியான பென்கை எனும் பகுதியில் வசித்துவரும் 7 வயது நிரம்பிய “லை சுயவான்” என்ற பெண்ணுக்கே இவ்வாறு காணப்படுகின்றது. இது பற்றி டாக்டர்கள் கருத்து தெரிவிக்கையில் இப்பெண்ணுக்கு பிறக்கும் போது சிறிய மச்சமாகவே காணப்பட்டது. ஆனால் இவர் வளர வளர அதுவும் வளர்ந்து இன்று உடல் முழுவதும் பரவியுள்ளது. சாம்பல் நிறத்தில் காணப்படும் சிறிய ரோமங்களாக அது காணப்படுகிறது.

இது பற்றி குறித்த பெண் கூறுகையில் எனது உடலின் அரை வாசிக்கு இந்த மாற்றம் காணப்படுகிறது. இதனால் என்னுடன் சேர்ந்து விளையாடுவதற்கு ஏனைய சிறுவர்கள் மறுக்கின்றார்கள். அவர்கள் எல்லோரும் என்னை பூனைப்பெண் என்றுதான் அழைக்கின்றனர் எனத்தெரிவித்தார். இதே போல் சீனாவில் இன்னுமொரு சிறுவனும் காணப்படுகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published.