வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மாற்று வலுவுடைய, வல்வை புளுஸ் விளையாட்டு கழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர், செல்வன் பாலச்சந்திரன் ஜெகன் (வயது 26) 110 மீட்டர் தடை தாண்டல் போட்டியில் 25.54 செக்கனில் ஓடி சாதனை படைத்துள்ளார்.
கடந்த 26 ஆம் திகதி பிற்பகல் 4.30 மணியளவில், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் , யாழ்மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்ட இச்சாதனையானது, இதுவரை அகில இலங்கை மட்டத்தில் முன்னெடுக்கப்படவில்லை என அறியமுடிகின்றது.
இச்சாதனை முயற்சி பற்றி கருத்துத் தெரிவித்த செல்வன் ஜெகன், அகில இலங்கை மட்டத்திலும், அதனைத் தொடர்ந்து Guinness மட்டத்தில் இடம் பெறுவதே தனது நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.
பரா ஒலிம்பிக்கில் தடை தாண்டல் விளையாட்டை சேர்க்க வேண்டும் எனவும் தனது திறமைக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே இவரின் வேண்டுகோள் ஆகும்.











Leave a Reply