தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் 2026

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்த மகோற்சவத் திருவிழா நாளை ஆவணி 12ஆம் திகதி புதன்கிழமை நள்ளிரவு 12.20 மணிக்கு கொடியேற்றத்துடன் பக்தி பூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து பல்வேறு திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறவுள்ள நிலையில், ஆவணி 26ஆம் திகதி புதன்கிழமை தேர்த்திருவிழா வெகு விமரிசையாக இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆவணி 27ஆம் திகதி வியாழக்கிழமை காலை தீர்த்தத்திருவிழாவும், அன்றைய தினம் மாலை மௌனத்திருவிழாவும் நடைபெறவுள்ளன.

இத்திருவிழாக்களில்  பல பகுதிகளிலிருந்தும் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு, செல்வச்சந்நிதி முருகப் பெருமானை வழிபட்டு அருளாசி பெறவுள்ளனர். வேல் தாங்கிய முருகப் பெருமானின் திருவருளால் அனைத்து அடியார்களுக்கும் நல்வாழ்வு, மனநிம்மதி மற்றும் வளம் கிடைக்க வேண்டி பக்தர்கள் பிரார்த்தனையில் ஈடுபடவுள்ளனர்.

வேல் உண்டு வினையில்லை…
மயில் உண்டு பயமில்லை…
செல்வச்சந்நிதி முருகப் பெருமானே போற்றி! போற்றி!