வல்வை ஊக்குவிப்பு குழு நடாத்திய மென்பந்தாட்டம்,தண்ட உதைபந்தாட்டம் ஆகிய தொடரின் இறுதிப்போட்டிகள் இன்று வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இதில் மென்பந்தாட்ட இறுதிப்போட்டியில் வல்வை சைனிங்ஸ் எதிர் வல்வை ரெயின்போ அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சைனிங்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட்டது 1௦ ஓவர்கள் நிறைவில் ரெயின்போ அணி 7 விக்கெட் இழப்பிற்க்கு 84 ஓட்டங்களை பெற்றது.வெற்றி இலக்கை நோக்கி ஆடிய சைனிங்ஸ் அணி 1௦ ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்க்கு 65 ஓட்டங்களை பெற்றது இதில் வல்வை ரெயின்போ முதலாம் இடத்தை பெற்று கொண்டது.தொடர் ஆட்டநாயகனாக அபிநயனும்,தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக அன்பழகனும்,வளர்ந்து வரும் வீரராக பிரசாந்தும் இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகன் பிரணவன் தெரிவு செய்யப்பட்டனர்.இரண்டாவதாக தண்ட உதைபந்தாட்டம் வல்வை இளங்கதிர் எதிர் வல்வை ரெயின்போ அணிகள் மோதின, இதில் வல்வை இளங்கதிர் அணி முதலாவது இடத்தை தனதாக்கிக்கொண்டது. சிறந்த கோல்காப்பாளர் விஜிகரனும் சிறந்த தண்ட உதை வீரராக மதுசந்தும் தெரிவு செய்யப்பட்டனர்.தலைவர் உரை,பரிசில்கள் வழங்கல் நன்றியுரையுடன் போட்டிகள் நிறைவுபெற்றது.