பிரித்தானியாவில் கருணை இல்லத்துக்கு உதவ நிர்வாண ஓட்டம்: புதுமையான சவால் (வீடியோ இணைப்பு)
பிரித்தானியாவை சேர்ந்த செப் (26) என்ற உலக ப்ரீ ரன்னர் சாம்பியன் தற்போது புது விதமான சவால் ஒன்றை கையில் எடுத்து கொண்டுள்ளார்.தனது நண்பரின் கருணை இல்லத்திற்காக நிதி திரட்டுவதற்காக இவர் தற்போது நிர்வாணமாக லண்டன் கட்டிடங்களின் மேல் ஓடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படங்களை எடுப்பது புகைப்பாடகாரர்களுக்கு கடினம் என்பதால், அவருடைய நண்பரும் மற்றொரு ப்ரீ ரன்னரான ஜேசன் பால் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார்.
இந்த புகைப்படங்களை எடுப்பதற்கு ஜேசனுக்கு 4 தினங்கள் எடுத்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் எடுத்த 8 புகைப்படங்களின் விலை 100 முதல் 600 பவுண்டுகள் வரை விற்கப்பட்டு, அந்த பணம் இவரது நண்பரான ஜேமி ஆலிவரின் கருணை இல்லத்தில் உள்ள சிறுவர்கள் வழங்கப்படுகிறது.
மேலும், இதுகுறித்து செப் கூறுகயில், இவ்வாறு செய்யும் போது நம்மால் எதுவும் முடியும் என நம்பிக்கை வளர்வதாக குறிப்பிட்டுள்ளார்.
















