அமெரிக்காவின் ஒக்லஹோமா(Oklahoma) மாகாணத்தில் துல்சா(Tulsa) நகரை சேர்ந்த இராணுவ அதிகாரி கிறிஸ்டா ஏஞ்சல்ஸ்(Christa Engles Age-26) என்ற பெண்ணுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.
சம்பவத்தன்று தனது மகளுக்கு ஏஞ்சல்ஸ் டைப்பர்(Diaper) மாற்றிக் கொண்டிருக்கும்போது, அங்கே அவரது 3 வயது மகன், தனது கையில் வைத்திருந்த நிஜ துப்பாக்கியால் விளையாட்டுத்தனமாக தாயாரின் தலையில் சுட்டுள்ளான்.
இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ஏஞ்சல்ஸ் உயிரிழந்துள்ளார். ஆனால் அவர் இறந்ததை அறியாத சிறுவன் தன் தாயை விளையாடுமாறு அழைத்துள்ளான்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கூறுகையில், துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டு நாங்கள் ஓடி வந்து பார்த்த போது, ஏஞ்சல்ஸ் ரத்த வெள்ளத்தில் கிடந்தார் என்றும் நடந்த விபரீதம் அறியாமல் அச்சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான் எனவும் தெரிவித்துள்ளனர்.





















Leave a Reply