
அமெரிக்காவடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடாத்தத் தயார் என வடகொரியா அறிவித்துள்ளது. தென் கொரியாவுடனான பேச்சுவார்த்தைகளை ரத்து செய்து சில நாட்களில் வடகொரியா இந்த அறிவிப்பை விடுத்துள்ளது,
பிராந்திய வலயத்தில் ஸ்திரத்தன்மையையும் சமாதானத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2009ம் ஆண்டின் பின்னர் வடகொரியா அமெரிக்க உயர்மட்டப் பேச்சுவர்ர்த்தைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நிபந்தனைகள் எதனை விதிக்காது பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க விரும்புவதாக வடகொரியா அறிவித்துள்ளது. எங்கு எப்போது பேச்சுவார்த்தை நடத்துவது என்பதனை அமெரிக்கா தீர்மானிக்க முடியும் என தெரிவித்துள்ளது,




















Leave a Reply