Search

சிரியாவில் மார்ச் மாதம் இடம்பெற்ற மோதல்களில் 6000 பேர் பலி

சிரியாவில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் சுமார் 6000 உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சிரிய அதிபர் பசர் அல் அசாடிற்கு எதிராக சிரியாவில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் ஒரு மாதத்தில் அதிகளவு மரணங்கள் கடந்த மாதமே பதிவாகியுள்ளது.
கடந்த மாதம் மட்டும் சுமார் 6005 பேர் மோதல்களில் உயிரிழந்துள்ளனர்.

இதில் 291 பெண்களும், 298 சிறுவர் சிறுமியரும், 1486 கிளர்ச்சியாளர்களும், 1464 அரச படையினரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த ஏனையோர் யார் என்பது சரியான முறையில் உறுதிப்படுத்தப்படவில்லை. இவர்கள் பெரும்பாலும் பொதுமக்களாக அல்லது கிளர்ச்சியாளர்களாக இருக்கக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டு காலப் பகுதி போராட்டங்களில் மொத்தமாக 120000 பேர் உயிரிழந்திருக்கக் கூடுமென சுட்டிக்காட்டப்படுகின்றது.

உத்தியோகபூர்வ புள்ளி விபரங்களில் 70000 பேர் உயிரிழந்ததாககவே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இதனை விடவும் அதிகளவானோர் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழப்புக்கள் உள்ளிட்ட சேத விபரங்களை மோதல் களங்களிலிருந்து துல்லியமாக வெளியிடுவது நடைமுறைச்சாத்தியமில்லை எனவும் இதனால் அண்ணளவான மதிப்பீடுகளே வெளியிடப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.




Leave a Reply

Your email address will not be published.