ஆதிசக்தி  உதை  பலாலி விண்மீன் அணியை எதிர்த்து விளையாடி. சம்பியனானது கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் அணி.

ஆதிசக்தி  உதை  பலாலி விண்மீன் அணியை எதிர்த்து விளையாடி. சம்பியனானது கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் அணி.

மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வல்வெட்டித்துறை ஆதிசக்தி வி.க நடாத்திய யாழ் மாவட்ட ரீதியிலான அணிக்கு 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் எதிர் பலாலி விண்மீன் அணிகள் மோதியது .

ஆரம்பம் முதல் இறுதியாட்டத்திற்கு ஏற்பவே போட்டி அமைந்தது .இரு அணிகளும் தமது அணிக்காக கோல் பெறுவதற்கு பல்வேறு வகையில் முயற்சிகளை மேற்கொண்ட போதும் இரு அணியினதும் பின்கள வீரர்களின் சிறப்பான தடுப்பாட்டத்தினால் கோல் பெறும் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. முதல் பாதியாட்டம் எவ்வித கோல்களுமின்றி முடிவடைந்தது . இடைவேளையின் பின் இரண்டாம் பாதியாட்டத்தில் இரு அணிகளும் மேலும் புது வியூகங்களுடன் களமிறங்கின. அந்த வகையில் இரு அணிகளும் தமது அணிக்காக கோல்களை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள எதிரணி வீரர்களினால் முறியடிக்கப்பட்டது .இதன் பயனாக ஆட்டத்தின் 37 வது நிமிடத்தில் ஆர்த்திகனால் சிறப்பான முறையில் அதிரடியாக தனது அணிக்கான 1வது கோல் பெறப்பட்டது . கோல் பெறப்பட்டதும் ஆட்டத்தின் வேகம் மேலும் அதிகரித்தது . இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் மேலதிக கோல் இன்றி ஆட்டம் முடிவடைய மறைந்த வீரர்களின் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்தினை கைப்பற்றியதோடு
ரூபா 150000 பணப்பரிசினையும் தட்டிச் சென்றது .

இவ் வெற்றியின் மூலம் இவ் ஆண்டின் முதலாவது மாவட்ட வெற்றிக்கிண்ணத்தினை கைப்பற்றியது .

இப் போட்டியில் 2ம் இடத்தினை பெற்ற பலாலி விண்மீன் விளையாட்டுக்கழகம் .

கோல் அடித்தோர்
ஆர்த்திகன் -1கோல்

போட்டியின் ஆட்ட நாயகன் –
ஆர்த்திகன்

சிறந்த கோல் காப்பாளர் –
கீர்த்தனன்

 

Leave a Reply

Your email address will not be published.