யாழ் புதிய அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் உத்தியோத்தர்களுக்கு அழைப்பு மக்களின் வரிப்பணத்தில் தான் யாம் சம்பளம் பெறுகின்றோம். ஒருவரேனும் வெறும் கையுடன் திரும்பி செல்லாது நீதியாக சேவைகளை வழங்க முன்வாருங்கள்.

யாழ். மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன்  17.02.2020 தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

யாழ். அரசாங்க அதிபர் திணைக்களத்தில் இன்று காலை கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு இடம்பெற்றது.

சர்வமத வழிபாடுகளை தொடர்ந்து புதிய அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

யாழ். மாவட்டத்தின் அரசாங்க அதிபராக இதுவரையில் செயற்பட்ட நாகலிங்கம் வேதநாயகனுக்கு மட்டக்களப்புக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து வெற்றிடமாகவுள்ள யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் பதவிக்கு கணபதிப்பிள்ளை மகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கணபதிப்பிள்ளை மகேசன் இதற்கு முன்னர் நிதி மற்றும் பொருளாதார கொள்கைகள் அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *