குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்களின் ஒத்துழைப்பை பொலிஸார் கோரியுள்ளனர். குற்றங்கள் அல்லது ஆபத்தான சம்பவங்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் பொதுமக்களிடம் இருந்தால், அவற்றை பொலிஸாருக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற வாகன ஓட்டம் தொடர்பான வீடியோ பதிவுகளையும் பொதுமக்கள் பொலிஸாருக்கு அனுப்ப முடியும். இதற்காக 070-4755600 என்ற WhatsApp இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோத செயல்களைத் தடுப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இந்த நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.













