வல்வை உதை-இன்றைய இரண்டாவது புங்குடுதீவு நண்பர்கள் ( தீவு ) விளையாட்டுக்கழகம் 3.1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது 18/02/2020 செவ்வாய்கிழமை

வல்வை உதை-இன்றைய இரண்டாவது புங்குடுதீவு நண்பர்கள் ( தீவு ) விளையாட்டுக்கழகம் 3.1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது 18/02/2020 செவ்வாய்கிழமை

வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரில்.முதல் நான்கு பரிசில்களும் 7,00,000.00 ரூபா (ஏழு இலட்சம்) பெறுமதியானது.இது வடமாகாணத்தில் முதல் தடவையாக வழங்கப்படும் மாபெரும் பரிசில் தொகையாகும்.

வல்வை விளையாட்டுக்கழகம் வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரின்
இன்றைய முதலாவது ஆட்டத்தில் வட்டக்கச்சி இளந்தளிர் வி.க ( கிளி ) எதிர் கொற்றாவத்தை சிவானந்தா வி.க
அணியும் மோத இருந்தது.வட்டக்கச்சி இளந்தளிர் வி.க ( கிளி ) பங்கு பற்றாமையினால் கொற்றாவத்தை சிவானந்தா விளையாட்டுக்கழகத்திற்கு வெற்றி அறிவிக்கப்பட்டு அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

அதனைத்தொடர்ந்து மாலை 4.00 மணிக்கு இடம்பெற்ற இரண்டாவது ஆட்டத்தில் உடுப்பிட்டி யூத் வி.க எதிர் புங்குடுதீவு நண்பர்கள் ( தீவு )விளையாட்டுக் கழகம் மோதியது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப் போட்டியில் புங்குடுதீவு நண்பர்கள் ( தீவு ) விளையாட்டுக்கழகம் 3.1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவானது.

ஆட்ட நாயக புங்குடுதீவு நண்பர்கள் ( தீவு )
விளையாட்டுக்கழக செந்தூரன் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *