இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஓகஸ்ட் மாதத்தின் முதல் 6 நாட்களில் இலங்கைக்கு 42,810 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து 7,827 பேரும், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 4,922 பேரும், சீனாவில் இருந்து 3,031 பேரும், பிரான்ஸில் இருந்து 3,908 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும், 2026 ஜனவரி 01 முதல் ஓகஸ்ட் 06 வரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,386,228 ஆக பதிவாகியுள்ளது. இதில் இந்தியாவில் இருந்து 346,057 பேரும், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 135,323 பேரும் வருகை தந்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதன் மூலம், இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு மேலும் சாதகமான நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக இந்தியா உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் இருந்து அதிகளவான பயணிகள் வருகை தருவது குறிப்பிடத்தக்கதாகும்.