வல்வை உதையின் நாளைய போட்டி ஊர்காவற்துறை சென்ஜேம்ஸ் ( தீவகம்) வி.க எதிர்த்து நவாலி சென்பீற்றர்ஸ் (வலிகாமம்) அணியும் தொடர்ந்து கிராஞ்சி செல்சிற்றி (கிளிநொச்சி) எதிர்த்து சாவற்காடு மகாத்மா (வலிகாமம்) மோதவுள்ளது..
வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடர் ….
வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரானது வல்வை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது…
அந்தவகையில் நாளைய தினம் (19/02/2020) மாலை 3.00 மணிக்கு இடம்பெறவுள்ள ஆட்டத்தில் ஊர்காவற்துறை சென்ஜேம்ஸ் ( தீவகம்) விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து நவாலி சென்பீற்றர்ஸ் (வலிகாமம்) அணியும் அதனைத்தொடர்ந்து மாலை 4.00 மணிக்கு இடம்பெறவுள்ள ஆட்டத்தில் கிராஞ்சி செல்சிற்றி (கிளிநொச்சி) அணியினை எதிர்த்து சாவற்காடு மகாத்மா (வலிகாமம்) மோதவுள்ளது..
அனைத்து உதைபந்தாட்ட ரசிகர்களையும் அன்போடு அழைக்கின்றோம்..
பிரவேசம்:−30 ரூபா








