வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடர் .
மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றன சென்நியூஸ்டார் மற்றும் வதிரி டயமன்ஸ் விளையாட்டுக்கழகம்
வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரானது வல்வை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில்இன்றைய தினம் (26 /02/2020) இடம்பெற்ற ஆட்டத்தில் சமரபாகு நியூட்டன் விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து சென்நியூஸ்டார் அணியானது மோதியது..அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய சென்நியூஸ்டார் அணியானது 03:01 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.
ஆட்டநாயகனாக சென்நியூஸ்டார் அணியின் லுகிர்தன் தெரிவுசெய்யப்பட்டார்..
அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாவது ஆட்டத்தில் வதிரிடயமன்ஸ் விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து புங்குடுதீவு பாரதி விளையாட்டுக்கழகமானது மோதியது..இவ்வாட்டத்தில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய வதிரி டயமன்ஸ்அணியானது 06:00 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு நுழைந்தது.
ஆட்டநாயகனாக வதிரி டயமன்ஸ் அணியின் பிறேம்குமார் தெரிவுசெய்யப்பட்டார்.
3 மணிக்கு
ஆனைக்கோட்டை யூனியன்
Vs
ஜெயந்தி நகர் (கிளி)
4 மணிக்கு
பாடுமீன்
Vs
பூநகரி இளந்தளிர்


















Leave a Reply