19வது சர்வதேச சோட்டோகான் கராத்தே அசோசியேசன் நடாத்திய கராத்தே சம்பியன் சிப் 2020 (19th International S.K.A karate Championship srilanka 2020) க்கான மாத்தளை அலிக் அளுவிகாரை உள்ளக விளையாட்டரங்கில் 23.02.2020இல் நடைபெற்றது.
இப்போட்டிகளுக்கு இந்தியா பாக்கிஸ்தான் நேபாளம் போன்ற நாடுகள் அழைக்கப்படுகின்ற போதிலும் இந்திய வீரவீரகனைகள் மட்டுமே வருகை தருகின்றார்கள்.
இப்போட்டியில் பருத்தித்துறை தற்காப்பு கலையகத்தின் மாணவர்களாகிய வல்வெட்டித்துறையை சேர்ந்த முரளி மாலதி 45 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் காட்டாப்போட்டியில் தங்கமும் 11 வயதுப்பிரிவில் முரளி பரிதியன் காட்டா மற்றும் குறித்த போட்டிகளில் இரண்டு தங்கம் பெற்றுக்கொண்டார்.
சென்சேய் இரத்தினசோதி ( 7th Dan WKF) அவர்களின் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.







ஜப்பானிய தூதரகமும், இலங்கை தேசிய கராத்தே தோ சம்மேளனமும் இணைந்து தேசிய ரீதியில் நடத்திய 2020
க்கான காட்சி கராத்தே சுற்றுப் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்ற 45-50 பிரிவில் வல்வையை சேர்ந்த முரளி மாலதி அவர்களும்
75 வயதுப்பிரிவில் பருத்தித்துறையை சேர்ந்த சோதி மாஸ்ட அவர்களும்.
11 வயது பிரிவில் முரளி பரிதியன் சிறந்த தெரிவில் 08 இடத்தை பெற்றுள்ளார்கள். இவர்களுக்கு வல்வை மக்கள் நலன்புரிசங்கங்கள் vvtuk.com இணையம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.


















Leave a Reply