ஜேர்மனி தலைநகரிலுள்ள பெர்லின் மருத்துவமனைக்கு, ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 24 வயது மிக்க இளைஞர் ஒருவர் கண்பார்வை குறைபாடு காரணமாக கொண்டு வரப்பட்டார்.
அப்போது அவர் வலது கண் பார்வை குறைவு, தலைவலி, மூக்கில் ரத்தம் வடிதல் போன்ற பிரச்சினைகள் இருப்பதாகவும் கூறினார்.
இதனால் அதிநவீன கணனி ஸ்கேனிங் மூலம் மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தனர். அப்போது அவரது கழுத்தின் பின்புறத்தலையில் 7 சென்டி மீற்றர் நீளமுள்ள பென்சில் ஒன்று இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, 15 வருடங்களுக்கு முன்னர் சிறுவயதில் தனது தலையில் பென்சில் குத்தியதை ஞாபகப்படுத்தி சொன்னார். அப்போதிலிருந்து தலைவலியும், மூக்கில் ரத்தம் வடிதலும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பின்னர் அறுவை சிகிச்சையின் மூலம் அந்த பென்சில் அகற்றப்பட்டது. இருந்தும் அவரது கண் பார்வை குறைவை சரிசெய்யமுடியவில்லை.




















Leave a Reply