திருகோணமலை வைத்தியசாலையில் 3.1 கிலோ சிறுநீரகக் கல் அகற்றம்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் 52 வயதுடைய நபர் ஒருவரின் 3 கிலோ 100 கிராம் எடையுடைய சிறுநீரகக் கல் சத்திர சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.

டொக்டர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையிலான வைத்தியக் குழுவினர்  (14.08.2026) இந்த சத்திரசிகிச்சையை மேற்கொண்டனர்.

2003ஆம் ஆண்டு பிரேசிலில் 1.9 கிலோ எடையுடைய சிறுநீரகக் கல் அகற்றப்பட்டதாக பதிவுகள் தெரிவிக்கும் நிலையில், திருகோணமலையில் அகற்றப்பட்ட கல் அதைவிட அதிக எடையுடையதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது திருகோணமலை பொது வைத்தியசாலையின் மருத்துவக் குழுவினருக்கு முக்கியமான சாதனையாக பார்க்கப்படுகிறது.