சிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -5
சிறப்பாக நடாத்தப்பட்ட கணிதப் பெருவிழா 2019
வழமைபோல் மிகவும் அவதானத்துடன் ஒழுங்கமைக்கப்பட்ட சிதம்பராக் கணிதப்போட்டியின் பரிசளிப்புவிழா, கணிதப் பெருவிழா 2019 மிகவும் சிறப்பாக THE LIGHT மண்டபத்தில் 29.07.2019 சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நிறைவு செய்யப்பட்டது. இவ்வருடமும் இப்பெருவிழா குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு குறித்த நேரத்தில் நிறைவு செய்யப்பட்டது.
இங்கிலாந்தில் 32 பரீட்சை நிலையங்களில் நடாத்தப்பட்ட இக்கணிதப்போட்டியில் 3000ற்திற்குமதிகமான தோன்றிய மாணவர்களில் 900 பேர் இவ்விழாவில் கெளரவிக்கப்பட்டார்கள்.இவ்விழாவிற்கான பிரதான அனுசரனையாளர் HI-LINE CASH and CARRY.