வல்வை வி.க உதை மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றன துறையூர் ஐயனார் மற்றும் இமையாணன் மத்தி அணிகள்.
மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றன துறையூர் ஐயனார் மற்றும் இமையாணன் மத்தி அணிகள்.
வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரானது வல்வை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது…
அந்தவகையில்இன்றைய தினம் (03/03/2020) இடம்பெற்ற ஆட்டத்தில் உரும்பிராய் திருக்குமரன் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து துறையூர் ஐயனார் அணியானது மோதியது..
இவ் ஆட்டத்தில் துறையூர் ஐயனார் அணியானது 02:00 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது…..ஆட்டநாயகனாக ஐயனார் அணியின் சுயீவன் தெரிவுசெய்யப்பட்டார்..
அதனைத்தொடர்ந்து கட்டைக்காடு சென்மேரிஸ் அணியுடனான இரண்டாவது ஆட்டத்தில் இமையாணன் மத்தி அணி வெற்றியுடன் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.












