சிரியாவில் சமய நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு சிறுவன் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
15 வயதான முகமது கட்டா என்ற சிறுவனுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சமய நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்ட சிறுவனுக்கு அல்கொய்தா ஆதரவு அடிப்படைவாத அமைப்பு மரண தண்டனை விதித்தது.
இதையடுத்து, அலெப்பே என்ற இடத்தில் அந்த சிறுவன், அவனது பெற்றோர் முன்னிலையில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டான்.
சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அவனது புகைப்படம் வெளியிடப்பட்டது.
தண்டனை நிறைவேற்றிய அடிப்படைவாத அமைப்பின் தலைவர் ராமி அப்துல் ரகுமான் இது பற்றி கூறுகையில்,
“இத்தகைய குற்றத்தை கண்டுகொள்ளாமல் விட்டு விட முடியாது. இது நமது எதிரிகளின் புரட்சிக்கு உறுதுணையாக அமைந்துவிடும்” என கூறினார்.