வெள்ளி மயில் வாகனத்தில் ஓய்யாரமாக நல்லூர்க் கந்தன் வீதி உலா!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழா இன்று (17.08.2026) கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக ஆரம்பமானது.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து நடைபெற்ற முதலாம்நாள் மாலைத் திருவிழாவில், நல்லூர்க் கந்தன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கினார். அலங்கரிக்கப்பட்ட வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் வீதி உலா வந்த காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

ஆலய வீதிகளில் பெருமளவான பக்தர்கள் திரண்டு, பக்தி முழக்கங்களுடன் நல்லூர்க் கந்தனை தரிசித்து அருள்பெற்றனர். இதனையடுத்து, நல்லூர் ஆலயத்தின் மஹோற்சவத் திருவிழா நாட்கள் சிறப்பாக நடைபெறவுள்ளன.