உயிர்காப்புக்காக அவசரஉதவி வழங்கப்பட்டுள்ளது
——————————————————————————-
தமிழ்நாட்டில் வாழும் வல்வையர் ஒருவரின் சிறுகுழந்தையான
செல்வன்.உ.ஜோன் என்பவருக்கு இதயத்தில் காணப்படும்
ஆபத்தான துவாரம் காரணமாக உடனடியான சிகிச்சை தேவைப்படுகிறது.
சிகிச்சை செய்யாதுவிட்டால் அந்த குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக அமையலாம் என்’பதால்
பிரித்தானியாவில் செயற்படும் வல்வை நலன்புரிச்சங்கம் உடனடி உதவியாக
இந்தியபணம் ரூபா ஒருலட்சம் வழங்கியுள்ளது.
வல்வை நலன்புரிச்சங்கம் பிரித்தானிய கிளையால் நிரந்தர வைப்பில் இடப்பட்டு பெறப்படும்
மாதாந்தபணத்தில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்