தாக்குதலுக்கு எதிராக போராடுகின்ற புலம்பெயர் உறவுகளுக்கு நன்றி -யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்.

எங்களை அடித்து உதைத்தால் எதிர்த்துக் கேட்பதற்கு எவருமில்லையென்று சிங்களவர்கள் கனவு காண்கிறார்கள். அவர்களின் கனவை அடித்து நொருக்குவது போல புலம்பெயர் தமிழ் மக்களான எமது உறவுகள் எமக்காகக் குரல்கொடுப்பது எமக்குப் பெரும் ஆறுதலாக உள்ளது.

இந்த குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். எங்களைத் தாக்கிய சிங்களவர்களை கண்டித்து நீங்கள் முன்னெடுக்கின்ற போராட்டங்கள் எமது விடுதலையை வென்றெடுப்பதற்குரிய ஆணித்தரமான போராட்டங்களாக அமைய வேண்டுமென்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் தாக்கப்பட்டமைக்கு சர்வதேசம் பூராகவும் வாழ்கின்ற தமிழ் மக்களும் தமிழ் இளையோரும் கொதித்தெழுந்துள்ளமை தங்களுக்கு மேலும் மேலும் வீரியத்தைத் தந்துள்ளதாகவும் தங்களுக்காக சர்வதேசம் பூராகவும் கண்டனப் போராட்டங்கள் நடைபெறுகின்றமையானது தங்கள் பணியையும் தங்கள் விடுதலை வேட்கையையும் சர்வதேச தமிழ் மக்கள் புரிந்துகொண்டமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களாகிய தாங்கள் சிங்களப் படையினராலும் காவல்துறையினராலும் படைப் புலனாய்வாளர்களாலும் ஈவிரக்கமின்றித் தாக்கப்பட்டமையைக் கண்டித்து சர்வதேசம் பூராகவும் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்ற தமிழ் இளையோருக்கும் விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கும் மாணவர்கள் மற்றும் பல்துறை சார்ந்த அனைவருக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை தொடர்ந்து நடைபெறுகின்ற போராட்டங்களில் அலையலையாக மக்கள் அணிதிரண்டு தமிழ் மக்களின் ஒட்டுமொத்த ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டுமென்றும் இதன் மூலமே ஈழத்தில் வாழ்கின்ற மக்கள் மீதும் மாணவர்கள் மீதும் சிங்களவன் கைவைக்க அஞ்சுவான் என்றும் மாணவர்கள் மேலும் தெரிவித்திருக்கின்றனர்.

மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிராக புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு நன்றி தெரிவித்தும் போராட்டங்களின் தேவைகளை வலியுறுத்தியும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சங்கதி இணையத்தளத்திற்கு அனுப்பி வைத்துள்ள ஈ-மெயில் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிறிலங்கா படையினர் ஈழத்தில் அரங்கேற்றும் அராஜகங்கள் எல்லை மீறிச் சென்றுகொண்டிருக்கின்றன. எமது இனத்தின் விடுதலைக்காகவும் எமது மக்களின் சுபீட்சமான வாழ்வுக்காகவும் காடுகளிலும் முட்புதர்களிலும் அலைந்து உணவின்றி போராடி உலகத்திலேயே இல்லாத பெரும் தியாகம் செய்த எமது மாவீரர்களை நினைவுகூர்ந்து ஒரு தீபமேற்ற முடியாத சூழ் நிலையே தாயகத்தில் தற்போது நிலவுகிறது.

கடந்த 27 ஆம் திகதி நாம் என்ன செய்தோம்? செய்யக்கூடாத ஒன்றைச் செய்தோமா? ஊலகத்தில் இல்லாத ஒன்றைச் செய்தோமா? ஏந்தவொரு போரிலும் இறந்தவர்களை நினைவு கூர்வது உலகத்தின் நியதி. அந்த நியதியைத் தானே நாங்கள் செய்தோம். 30 வருடகாலப் போரில் இறந்த எமது உறவினர்களுக்கு பொது நாளொன்றில் அஞ்சலித் தீபம் ஏற்றினோம். இதற்கு சிங்களம் ஏன் தடை விதிக்கிறது. தடை விதித்தாலும் போதாதென்று எங்களை அச்சுறுத்தியது போதாது என்று எமது சகோதரிகள் தங்கியிருக்கின்ற விடுதிகளுக்குள் நுழைந்து அரச படைகள் அட்டகாசம் செய்தன.

ஏங்கள் வீட்டில் எமது சகோதரிகள் இரவு ஆடையுடன் படுத்திருக்கும் போது பக்கத்து வீட்டுக்காரன் வந்து கதவைத் திறந்து உள்ளே போக நாம் அனுமதிப்போமா? அதேபோன்;று பல்கலைக்கழக பெண்கள் விடுதிகளில் தங்கியிருந்த எமது சகோதரிகள் போன்ற மாணவிகளின் அறைகளை கால்களால் உதைத்துக்கொண்டு உள் நுழைந்த சிங்களக் காடையர்கள் மாணவிகளைத் தாக்கினர். வெளியே சொல்ல வெட்கமாயினும் சில மாணவிகள் சிங்களக் காடையர்களால் துப்பாக்கிப் பிடிகளால் தாக்கப்பட்டனர். இது தான் இந்த நாட்டின் ஜனநாயகமா?

நேரடியாக புலிகளுடன் மோத முடியாமல் வெளிநாடுகளில் பிச்சையெடுத்த ஆயுதங்களைக் கொண்டு வந்து வெளிநாட்டுப் படைகளின் உதவியுடன் வன்னியில் பேரவலத்தை ஏற்படுத்தி பல்லாயிரக்கணக்கான எமது உறவுகளைக் கொன்றழித்த சிங்களக் காடையர்கள் இரவு வேளை எமது சக மாணவிகளின் அறைகளுக்குள் புகுவதை நாம் அனுமதிக்க முடியுமா? அதைக் கண்டித்துத்தான் நாங்கள் மறுநாள் 28 ஆம் திகதி கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்தினோம். அந்தப் போராட்டத்திற்கு என்ன நடந்தது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

கொழும்பிலுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் தமது பல்கலைக்கழகங்களை விட்டு வெளியே வந்து விகாரமகா தேவி பூங்காவிற்கு முன்னால் போராட்டம் நடத்துகிறார்கள். லிப்டன் சுற்றுவட்டத்திற்கு முன்னால் போராட்டம் நடத்துகிறார்கள். அந்த போராட்டங்கள் கவனயீர்ப்புப் போராட்டங்களாக நடைபெறுவதில்லை. பெரும் ஆர்ப்பாட்டங்ளாகவே அந்தப் போராட்டங்கள் நடைபெறும். வுhகனப் போக்குவரத்தைக் கூட பொலிஸார் வேறு பாதைகளுக்கு மாற்றுவார்கள்.

ஆனால், நாங்கள் எமது பல்கலைக்கழகத்தை விட்டு அதிகம் போக்குவரத்து அற்ற எமது வீதியில் இறங்க அனுமதியில்லை. அன்று நாங்கள் செத்துப் பிழைத்தோம். நாங்கள் அனைவரும் காவல்துறையாலும் படையாலும் புலனாய்வாளர்களாலும் துரத்தித் துரத்தி அடிக்கப்பட்டோம். துமிழனிடம் ஒரு பண்பு உண்டு. நாய்க்கு அடிக்கும்போது கூட நாய் கத்திக்கொண்டு ஓடினால் மீண்டும் அடிக்கமாட்டார்கள். ஆனால் சிங்கள காடையர்கள் அன்று நாம் கத்திக்கொண்டு பாதுகாப்புத் தேடி ஒட ஒட எங்களை விரட்டினார்கள். கதவுகளுக்குள்ளும் வேலிகளுக்குள்ளும் கேற்றுகளுக்குள்ளும் தள்ளிவைத்து நசித்து அடித்தனர். மனிதாபிமானம் என்றே என்னென்று தெரியாதவர்களாக சிங்களக் காடையர்கள் அன்று செயற்பட்டனர்.

பல ஊடகவியலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் போன்றோர் சாட்சியங்களாகக் காட்சிகளைப் பதிவுசெய்துகொண்டிருந்தபோதே சிங்களச் சிப்பாய்கள் எங்கள் மீது இப்படி ஏறி மிதித்தனரென்றால், யாருமே இல்லாத, சாட்சியமில்லாமல் வன்னியில் நடந்த யுத்தத்தின் போது மகிந்தவின் படைகள் எப்படிச் செயற்பட்டிருப்பார்கள் என்பதை புலம்பெயர் தமிழ் மக்களே நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்.

சிங்களப் படைகளின் இந்தச் செயற்பாட்டை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், நாங்கள் இங்கே பெரிதாக எதையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றியமைக்க உங்களாலேயே முடியும். எமக்கு அடித்த உடனேயே நீங்கள் பொங்கியெழுந்தமை எங்களைப் பூரிப்படைய வைத்திருக்கிறது. சிங்களவன் எங்களை அடித்தபோது எமது பல்கலைக்கழகத் துணைவேந்தர் கூட ஏனென்று கேட்குமுன்னர் நீங்கள் எமக்கான கண்டனப் போராட்டங்கள், ஆதரவுப் போராhட்டங்கள் பலவற்றை ஏற்பாடு செய்து நடத்தியிருக்கிறீர்கள். நீங்கள் இப்படிப் பொங்கியெழுவீhர்கள் என்று நாம் கனவிலும் நினைக்கவில்லை.

சிறு வயதில் பிட்டுக்கு மண்சுமந்த சிவபெருமானின் கதையில் பாண்டிய மன்னன் சிவனுக்கு அடித்த அடி உலகிலுள்ள எல்லோர் முதுகிலும் விழுந்ததாம். அதுபோல், யாழ் பல்கலைக்கழக மாணவர்களாகிய எங்களுக்கு விழுந்த அடியை உலகிலுள்ள அத்தனை தமிழ் மக்களும் தங்களுக்கு விழுந்த அடியாகப் பார்க்கிறீர்கள். இது எமது ஒற்றுமைக்கு நல்ல எடுத்துக்காட்டு. இதுவரை எமக்கு அடித்தால் கேட்க யாருமில்லையென்று நினைத்தோம். ஆனால், இப்போது உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்பதை உங்கள் செய்கைளால் காட்டியிருக்கிறீர்கள். இனி நாம் அஞ்சமாட்டோம். ஏதிரியின் அட்டூழியங்களைத் தட்டிக்கேட்போம். நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் துணிந்து செயற்படுவோம்.

நீங்களும் எமக்காக குரல் கொடுங்கள். இந்தத் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் அலையலையாகக் கலந்துகொண்டு தமிழர்களின் ஒற்றுமையை உலகிற்கு வெளிப்படுத்துங்கள். இந்த எமது போராட்டங்கள் ஐ.நா சபையின் காதுகளை எட்ட வேண்டும். எமது நாடும் தனிநாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்காக நீங்கள் போராட்டங்களில் பங்கெடுங்கள். உங்கள் பலத்துடன் நாங்கள் எமது கல்விச் செயற்பாட்டையும் தாயகப் பணியையும் முன்னெடுப்போம்.

– யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்.

Leave a Reply

Your email address will not be published.