Search

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் – அமெரிக்க செனட்டர்கள்

இலங்கையில் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்படும் யுத்தக் குற்றச் செயல் சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொப் சேசி மற்றும் பெட்ரிக் லீஹே ஆகிய செனட்டர்களே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அரசாங்கப் படையினரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்தச் சம்பவங்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென குறித்த இரண்டு செனட்டர்களும் கோரியுள்ளனர்.
இந்தக் கோரிக்கை தொடர்பில் அமெரிக்க ராஜாங்கச் செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். இலங்கை அரசாங்கம், நாட்டு மக்களின் மெய்யான தேவைகளை பூர்த்தி செய்யத் தவறியுள்ளதாகவும் இதனால் சர்வதேச ரீதியான விசாரணைகள் அவசியம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மக்களுக்கு இதனை விடவும் காத்திரமான சேவைகள் வழங்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளனர்.யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதி தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
சுயாதீனமான சர்வதேச ரீதியான விசாரணைகளின் மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இலங்கை அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை அளித்த போதிலும் உண்மையில் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது என்ற போதிலும் மெய்யான சமாதானத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபடவில்லை என அமெரிக்க செனட்டர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



Leave a Reply

Your email address will not be published.