இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் விரிசலை ஏற்படுத்த முயற்சி!– பிரதமர்

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் விரிசலை ஏற்படுத்த முயற்சி!– பிரதமர்
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் விரிசலை ஏற்படு;த்த சிலர் முயற்சித்து வருவதாக பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

சிங்கள தமிழ் மக்களுக்கு மத்தியில் இடைவெளியை ஏற்படுத்தி, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்த சில மேற்குலக நாடுகள் முயற்சிக்கின்றன.

திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தைப் பயன்படுத்தி இந்தியாவிற்கு அச்சுறுத்தல் விடுக்க சிலர் முயற்சிக்கின்றனர்.

வலுவான பலம்பொருந்திய நாடுகள் வறிய நாடுகளுக்கு இடையில் பிளவினை ஏற்படுத்த முயற்சிக்கின்றன.

உலகை அழிக்கும் நோக்கில் ஆயுதம் தயாரிக்குமு; இந்த நாடுகள், உலகை ஆட்சி செய்ய விரும்புகின்றன.

மனித உரிமையை காரணம் காட்டி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த சில மேற்குலக நாடுகள் முயன்ற போதிலும், அவ்வாறான நாடுகளில் வன்முறைகள் குறையவில்லை.

மேற்குலக நாடுகள் உளவுப் பிரிவுகளைப் பயன்படுத்தி ஆசிய நாடுகளின் நிலைமைகளை கண்காணிக்கின்றனர்.

வரலாற்று காலம் முதல் சிங்கள தமிழ் மக்களுக்கு இடையில் நட்புறவு நீடித்து வருகின்றது.

மேற்குலக நாடுகளின் சதிகளில் சிக்காது இலங்கையர் என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டியது அவசியமானது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்து கலாச்சார திணைக்களத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.