கருணாவிற்கும் பிள்ளையானுக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் – ஐக்கிய பிக்குகள் முன்னணி

ஆளும் கட்சியின் 46 நாடாளுமன்ற உறுப்பினர்கள் UNPயுடன் இணைவர்:-

பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மான் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென ஐக்கிய பிக்குகள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய பிக்குகள் முன்னணி ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

கருணா மற்றும் பிள்ளையானுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மாறாக அவர்களுக்கு அரசியல் தஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாகவுமு; தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டை பற்றி கருத்திற் கொண்டு புலிப் பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென ஐக்கிய பிக்குகள் முன்னணியின் பிரதம அமைப்பாளர் அம்பலாவே கனகொல தேரர் தெரிவித்துள்ளார்.

2005ம் ஆண்டு தேர்தலின் போது தர்ம இராச்சியமொன்றை அமைப்பதாக வாக்குறுதி அளித்த இந்த அரசாங்கம் தற்போது கசினோ மன்னர்களை அழைத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில் கொழும்பு அருங்காட்சியக படிக் கட்டுகள் இடிந்து வீழ்ந்தனைப் போன்று நாட்டின் அரசாங்கமும் திடீரென இடிந்து விழும் என அவர் தெரிவித்துள்ளார்.

 ஆளும் கட்சியை சேர்ந்த 46 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைவர்:-
ஆளும் கட்சியை சேர்ந்த 46 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து கொள்ள போவதாகவும் இவர்களில் அமைச்சர்களும் இருப்பதாகவும்  அகில இலங்கை ஐக்கிய பிக்குகள் அமைப்பின் தேசிய அமைப்பாளர் அபன்கொட ஞானாலோக்க தேரர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் உள்ள கூட்டணி கட்சிகளை சேர்ந்த எவரும் இதில் இல்லை என தெரிவித்துள்ள அவர்,  அரும்பொருட்காட்சி சாலையில் அண்மையில் ஏற்பட்ட உடைவு போன்று, அரசாங்கமும், அவர்கள் அறியாமலேயே கவிழ்ந்து விடும் என கூறியுள்ளார்.  கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய தர்ம ராஜ்ஜியம் ஒன்றை ஏற்படுத்த போவதாக கூறியது, ஆனால் நாட்டில் எத்தனை கசினோ நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன, எத்தனை மாட்டை இறைச்சிக்கு அறுக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள என்பது எமக்கு தெரியும்.  இன்று கே.பி. கருணா, பிள்ளையான் போன்றோர் தேசப்பற்றாளர்களாக மாறியுள்ளனர்.  இவர்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் சிறப்புரிமைகளை பெற்றுக்கொண்டு இலங்கை எதிராக சூழ்ச்சிகளை செய்து வருகின்றனர் என்பதை நான் பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன்.
தமிழகத்தில் இலங்கை எதிராக நடைபெற்று வரும் அடக்குமுறை செயற்பாடுகளின் பின்னணியில் கே.பி மற்றும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உள்ளிட்ட பலர் உள்ளனர். பிக்குமாரை தாக்கும் முன்னுதாரணம் இலங்கையிலேயே வழங்கப்பட்டது. மாநாயக்க தேரர்களும், ஏனைய மத தலைவர்களும் நாட்டின் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தி சகவாழ்வை ஏற்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.
நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பான விசாரணை நடத்த பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படுகின்றன. சம்பவத்தை மூடி மறைக்கவே ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படுகின்றனவே தவிர சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக அல்ல.  எந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டு தீர்வுகள் வழங்கப்பட்ட என தாம் கேள்வி எழுப்புவதாகவும் அபன்கொட ஞானாலோக்க தேரர்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *