கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் நெருங்கிய தொடர்புகளை பேணியுள்ளதுடன், புலிகளின் சிரேஸ்ட தலைவர் தீபனின் உறவினர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் சகோதரர் ஒருவர் புலிகளுக்கு ஆதரவான இணையத்தளமொன்றை சுவிட்சர்லாந்தில் நடாத்தி வருகின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவரது சகோதரர் பற்றிய தகவல்களையும் புலி எதிர்ப்பாளர்கள் அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளனர்.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் வடக்கில் தனி ஈழ இராச்சியமொன்றை அமைக்கும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *