பிரித்தானியாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி, தமிழீழ விடுதலை நோக்கிய பாய்ச்சலாக தமிழக மாணவர்களின் எழுச்சி காணப்படுகின்றது!- காசி ஆனந்தன், பழ.நெடுமாறன்

இலங்கையில் 65 வருடகால இன அழிப்புக்கு நீதி வழங்கும் வகையில் ஐ.நா சர்வதேச சுயாதீன விசாரணையை நடத்த வலியுறுத்தி,  தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக பிரித்தானியாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெறவுள்ளது.

இம் மாபெரும் ஆர்ப்பாட்டப் போரணியில் கலந்து கொள்ளுமாறு உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், மற்றும் பழ.நெடுமாறன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில்,

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு கொதிப்பான காலத்தில் குமுறலான காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முள்ளிவாய்க்கால் நிகழ்ந்த பொழுது எல்லாம் முடிந்து விட்டது என்று முனகியவர்கள் இருக்கின்றனார்கள். ஆனால் அது முடிவல்ல ஒரு திருப்பம் என்று நாங்கள் நினைத்தோம்.

இன்று ஐந்து ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கின்ற நிலையில், உலகெங்கிலும் கொதித்தெழுந்திருக்கும் உணர்ச்சி அலைகளைப் பார்க்கின்ற பொழுது முள்ளிவாய்கால் முடிவல்ல என்பது தெட்டதெளிவாகத் தெரிகிறது.

உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் உணர்ச்சி வசப்பட்டுப் போய் இருக்கிறார்கள். குறிப்பாக அண்மையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அந்த நாளையொட்டிய காலகட்டத்தில், பாலச்சந்திரனுடைய அந்த கொடுமையாக கடைசி நொடிப்பாழுதும் புகைப்படம் மக்கள் முன் வைத்த நேரத்தில் உலகமெங்கும் வெடித்தெழுந்ததை நாம் பார்த்தோம்.

குறிப்பாக தமிழ் நாட்டில் மாணவர்களுடைய பேரெழுச்சி என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு பகுதியாக அமைந்ததையும், அது ஒரு வரலாற்று நிகழ்ச்சி என்பதையும் நாம் மறந்து விடுவதற்கு இல்லை.

தமிழீழ விடுதலை நோக்கிய பாய்ச்சலாக மாணவர்களின் எழுச்சி, ஓரிரு கல்லூரிகள் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலுள்ள பள்ளிக் கூடங்களும் பேரெழுச்சியாக வெடித்ததை நாம் பார்க்கிறோம்.

யாழில், 1920 , 26 களில் மாணவர்கள் சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கிடையிடையே மாணவர்கள் எழுந்தார்கள். 1958இல் தந்தை செல்வா காலத்தில் அறப்போராட்டம் நடைபெற்ற காலத்தில் யாழ்ப்பாணத்திலும் பல்கலைக்கழக மாணவர்கள் எழுந்தார்கள். மாணவர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் பங்காற்றி வருகின்றனர்.

எனவே லண்டன் வாழ் தமிழ்மக்கள் உணர்ச்சியோடு இந்தப் பேரணியில் கலந்துகொள்ள வேண்டும் என காசி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *