எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று சுதந்திர சதுக்கத்தில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ள உள்ளார்.
இன்றைய தினம் மாலை 6.00 மணியளவில் இந்த தேசிய நிகழ்வு நடைபெறவுள்ளது.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பதவிப் பிரமாணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வெளிநாட்டு ராஜதந்திரிகள் மதகுருமார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.
இதுவரையில் வெளியான முடிவுகளின் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன முன்னணி வகித்து வருகின்றார்.
எனினும் இதுவரையில் உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் இதுவரையில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
