எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார். புதிய ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் மைத்திரிபால சிறிசேன சர்வகட்சி அமைச்சரவை ஒன்றையும் நியமிக்க உள்ளார்.
நாளைய தினம் புதிய அமைச்சரவை ஒன்று நியமிக்கப்பட உள்ளது. இதில் அனைத்து கட்சிகளினதும் உறுப்பினர்களுக்கு பதவிகள் வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆளும் கட்சியின் மேலும் சில உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார்.










