மன்னார் மடு மாதா பெருவிழா சிறப்பாக நடைபெற்றது

மன்னார் மடு மாதா திருத்தலத்தின் வருடாந்த பெருவிழா இன்று (15) பக்தி பூர்வமாக சிறப்பாக நடைபெற்றது.

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் மடு மாதா திருத்தலத்திற்கு வருகை தந்து சிறப்பு திருப்பலி மற்றும் வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக மடு மாதாவின் திருச்சொரூப பவனி இடம்பெற்றதுடன், பக்தர்கள் பக்தியுடன் பங்கேற்று அன்னையின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டனர். இதனால் மடு திருத்தலப் பகுதி முழுவதும் பக்தர்களின் கூட்டத்தால் நிறைந்து காணப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த பெருவிழா, நாட்டின் கத்தோலிக்க மக்களால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மிக நிகழ்வாகக் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.