முல்லைத்தீவு – ஆனந்தபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள காணியொன்றில் எலும்புக் கூடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு -ஆனந்தபுரம் 5ஆம் வட்டாரத்திலுள்ள பழனியப்பன் தங்கம்மா என்பவரின் வீட்டிலுள்ள பதுங்கு குழியிலிருந்தே இந்த எலும்புக் கூடு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வன்னியில் ஏற்பட்ட இறுதிக் கட்ட போரில் இடம்பெயர்ந்து செல்வதற்காக குறித்த வீட்டு உரிமையாளர் தனது வீட்டு உபகரணங்களை பதுங்கு குழியினுள் இட்டு மூடியுள்ளார்.
தற்போது அதனை எடுப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை பதுங்கு குழியை தோண்டியபோது அதிலிருந்து ஆணின் மண்டையோடு ஒன்று வெளிப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மண்ணை தோண்டிய போது விடுதலைப் புலிகளின் உடையுடன் கூடிய எலும்புக்கூடு ஒன்று இருந்துள்ளது.
இதனையடுத்து, அச்சமடைந்த வீட்டு உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் எலும்புக் கூட்டை மீட்டுச் சென்றதுடன், பதுங்கு குழியைத் தோண்ட வேண்டாம் என்று கூறியுள்ளனர்