
கட்சியினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் கருத்திற்கொள்ளப்படாது சட்ட மூலம் மீண்டும் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். உரிய திருத்தங்கள் இன்றி சட்ட மூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களிக்கும் என சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய திவிநெகும தொடர்பான பாராளுமன்ற விவாதம் இன்றைய தினம் ஆரம்பாகவுள்ளது. இதேவேளை, பல திருத்தங்களுடனும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது என பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸின் உயர்மட்டக்குழு தீர்மானித்துள்ளது.
திவிநெகும சட்டமூலம் பல சர்ச்சைகளைக் கிளப்பியிருந்தாலும் அடிமட்ட மக்களின் நல்வாழ்விற்கு அவசியமான ஒரு சட்ட மூலமாகும் என கட்சி தெரிவித்துள்ளது. இதேவேளை, பாராளுமன்றத்தில் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ள திவிநெகும் சட்டமூலத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் சகல மாகாண சபைகளிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம் தொடர்பாக பொருளாதா அபிவிருத்தி அமைச்சரை கட்சியை சந்தித்து வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெருந்தோட்ட மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுபான்மை சமுகத்திற்கு நன்மை பகிக்கும் சகல சட்டமூலத்திற்கும் தமது கட்சி ஆதரவளிக்கும் என முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.