சிவஞானம் சிறிதரனின் அலுவலகம் இன்று இரண்டாவது தடவையாகவும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் அலுவலகம் இன்று இரண்டாவது தடவையாகவும்  சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. காலை 9.45 மணிமுதல் சுமார் 3 மணி நேரம் இந்த சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

இதனிடையே தேடுதலில் ஈடுபட்ட காவற்துறை அதிகாரி ஒருவர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்ற சிறிதரனின் செயலாளர் பொன்காந்தன்  தம்மால் கைது செய்யப்பட்டதாக தெரிவித்ததாக சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டிருந்த சமயம் தமது அலுவலகத்தில் தேடுதலுக்காக ஒரு அணியினர் மீண்டும் வந்திருப்பதாக அங்கிருந்த ஆதரவாளர்களால் தெரிவிக்கப்பட்டடதாக சிறிதரன் தெரிவித்தார்.

கொழும்பு பயங்கரவாத குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்ரர் சரத் சந்திர என்பவரது  தலைமையில் அறுவர் கொண்ட குழுவொன்றே வருகை தந்திருந்ததாக அவர் கூறினார்.

குறிப்பாக பொன்காந்தனால் வழங்கப்பட்ட வாக்குமூலம் ஒன்றின் அடிப்படையில்  சிறிதரனதும், அலுவலகத்திலுள்ள ஏனைய மடிக் கணணிகளையும் சோதனை செய்வதற்காகவே தாங்கள் வருகை தந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தாக  சிறிதரன் தெரிவித்தார்.

எனினும் கடந்த தேடுதல்களின் போதும் தமக்கு தகவல் வழங்கப்படவில்லை எனவும் இம்முறையும் தான் அங்கு இல்லாத போது தனக்கு தகவல் வழங்கப்படவில்லை எனவும் இது தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரிடமே தகவல் பெறப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்ததாகவும்  என்ன அடிப்படையில் தேடுதல் நடத்தப்பட்டது எனக் கோரப்பட்ட போது  பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழேயே தாங்கள்  தேடுதல் நடத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

இதேவேளை அங்கிருந்த சிறிதரனது கணிணி ஒன்றை பிரிசோதனை செய்ய முற்பட்ட வேளை  அலுவலகத்திற்கு பொறுப்பாக அங்கிருந்த ஆதரவாளரான சிங்கராஜா  ஜீவநாயகம்  என்பவர் குறித்த கணனியை சோதனை செய்வதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கின்றார்.  நாடாளுமன்ற உறுப்பினர் தற்பொழுது அலுவலகத்தில் இல்லை. மற்றையது  குறித்த  கணணியில் புதிதாக நீங்கள் ஏதாவதை சேர்த்தால்  அதற்கு தான் பொறுப்பாக மாட்டேன் எனவும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் சிறிதரனும் குறித்த மடிக்கணனியில் நீங்கள் புதிதாக ஏதாவதை சேர்தால் தாங்கள் பொறுப்பாக மாட்டோம் எனத் தெரிவித்து கடிதம்  ஒன்றை சமர்ப்பிக்குமாறும் கேட்டிருந்தார்.  எனினும் அதனை மறுதலித்த குறப்புலனாய்வுயினர் குறித்த கணனியை எடுத்துச் சென்றிருக்கின்றனர்.

இதேவேளை குறித்த அவரது கணனி அலுவலகத்தில் தற்போது இல்லை என சிறிதரனால் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அலுவலகம் வழமை போன்றே செயற்பட்டுக் கொண்டிருந்ததாகவும் அலுவலக பணியாளர்கள் கடமையில் இருந்த வேளையிலேயே  3 மணி சோதனை இடம்பெற்றிருக்கின்றது.

இது தொர்பாக  கருத்து தெரிவித்த சிவஞானம் சிறிதரன்  தொடர்ச்சியாக வழங்கப்படுகின்ற தேடுதல்கள் ஊடாக தனது அலுவலகத்தை மூடுவதற்கும் தனது கட்சி அலுவலகத்திற்கு ஆதரவாளர்கள் , பொதுமக்கள் வருவதனை தடுப்பதுமே  இதன் நேககம் எனவும்  அலுவலகத்தில் தற்காலிகமாக தங்கியிருந்த ஆதரவாளரான  சிங்கராஜா  ஜீவநாயகம்  என்பவரை இலக்கு வைத்தே தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவரிடம் 2 மணி நேரமாக அக்கு வேறு ஆணி; வேறாக  வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாகவும் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

 முன்னைய செய்திகள்-

Leave a Reply

Your email address will not be published.