இப்படகு விபத்தில் 4 வயதுடைய சிறுவனும், 10 வயதுடைய சிறுமியொருவரும் பலியாகியுள்ளனர். அப்படகில் இருந்த 20 பேர் மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அக்குழுவிலிருந்த ஒருவர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படகு விபத்திலிருந்து மீட்கப்பட்ட அனைவரும் யாவாவின் சிலகெப் (Cilacap) என்ற மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
படகின் எஞ்சின் உடைந்ததாலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து சிலகெப் (Cilacap) குடிவரவுத் திணைக்கள அதிகாரி ஷியாம்சுல் பஹ்ரி (Syamsul Bahri)கருத்து தெரிவிக்கையில், அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு புறப்பட்டுக் சென்றவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
அவர்களிடம் எங்கு செல்கின்றீர்கள் என கேட்டபோது “அவுஸ்திரேலியா” என்று மட்டுமே கூறினர். விபத்திலிருந்து பிழைத்தவர்கள் செமரங்கிலுள்ள (Semarang) அகதிகள் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
25 இலங்கை அகதிக் கோரிக்கையாளர்கள் இந்தப் படகில் பயணித்துள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.