ஜ.நாவை அதிரவைத்த புலம்பெயர் தமிழர்களின் குரல்!

ஜெனீவா ஜ.நா முன்றறில் திரண்ட தமிழ் மக்கள் பாததைகளை கையில் ஏந்தியவாறு மகிந்தறாஜபக்ச போர்க்குற்றவாளி,தமிழரிற்கு தீர்வு தமிழீழம் என்ற கோசங்களை எழுப்பியவாறு பெருந்திரளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

7ஆயிரத்திற்கம் அதிக மக்கள் ஜெனீவா முன்றலில் திரண்டு தங்கள் பேராட்டங்களை முன்னெடுத்துள்ளார்கள் ஜ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடத்துகொண்டிருக்கம் நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
தமிழின படுகொலைக்கு நீதிகேட்டு பன்னாடுகளின் கதவினை தட்டும் ஈழத்தமிழர்களின் போராட்டத்தில் பல நாடுகளில் இருந்து சென்ற தமிழர் பிரதிநிதிகள் அமைப்புக்களின் தலைவர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *