போர்க்குற்றம்’ – உரிய விசாரணைகள் இல்லையேல் சிறீலங்கா தனிமைப்படும் – பிரித்தானியா எச்சரிக்கை

சிறீலங்கா மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படும் வரை சிறீலங்காவுக்கு சர்வதேசத்துடன் முன்னோக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பில்லை என்று பிரித்தானியா அறிவித்துள்ளது.

பிரித்தானியாவின் நாடாளுமன்ற உதவி செயலாளரும் பொதுநலவாய மற்றும் வெளியுறவு அமைச்சருமான அலிஸ்டர் பேர்ட்( Alistair Burt) இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தங்காலையில் கடந்த வருடம் கொலை செய்யப்பட்ட பிரித்தானிய பிரசையின் விசாரணைகள் தாமதமாவது குறித்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சிமன் டான்சுக்கின் சிறீலங்காப் பயணத்தின் பின்னர் சமர்ப்பித்த அறிக்கை மீதே அமைச்சர் இந்தக்கருத்தை வெளியிட்டார்.

சிறீலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்படவேண்டியது அவசிமானதாகும்
மேலும் சிறீலங்காவின் முன்னாள் பிரதமநீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணையின்போது நேர்மையான நீதி பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இறுதிப்போரின் போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இல்லையேல் சிறீலங்கா அரசு சர்வதேசத்துடன் முன்னோக்கி செல்வதில் ஏற்படும் சிக்கல் நிலையை தவிர்க்க முடியாது என்றும் அலிஸ்டர் பேர்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *