கனகரத்தினத்தின் ‘சேட்’டில் பிடித்தனர் மக்கள்! மூடிய அறைக்குள் அரச அதிபருக்கு றிசாட் மிரட்டல்!!

கனகரத்தினத்தின் ‘சேட்’டில் பிடித்தனர் மக்கள்! மூடிய அறைக்குள் அரச அதிபருக்கு றிசாட் மிரட்டல்!!

முல்லைத்தீவு அரச அதிபரையும் அரச செயலக அதிகாரிகளையும் மூடி அறையில் வைத்து அமைச்சல் றிசாட் பதியுதீன் மிரட்டியுள்ளதாக தெரியவந்திருக்கின்றது. கடந்த வாரம் முள்ளியவளையில் முஸ்லிம் மக்களுக்காக நில ஆக்கிரமிப்பினை மேற்கொள்ளவதற்கான நடவடிக்கையினை அமைச்சர் றிசாட் பதியுதீன் மேற்கொண்டிருந்தார்.இருந்த போதிலும் அந்தப் பகுதி மக்கள் பலத்த எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். முடிந்தால் தமது உயிர்களை எடுத்துவிட்டு நிலத்தினை ஆக்கிரமிக்குமாறு மக்கள் உறுதியாக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர். சம்பவத்தின் போது அங்கு சென்றிருந்த முன்னாள் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது றிசாட்டின் கையாளாகச் செயற்படுபவருமான ச.கனகரத்தினம் மக்களுடன் முரண்பட்டதுடன் அந்தப் பகுதியில் முஸ்லிம்கள் ஏற்கனவே குடியிருந்தாகவும் கூறியிருக்கின்றார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் கனகரத்தினத்தின் சேட்டில் பிடித்து அவரைத் தாக்க முற்பட்டதாக தெரியவருகின்றது.

ஆக்கிரமிப்பு நடவடிக்கை தோல்வியடைந்தனை அடுத்து சம்பவம் நடைபெற்ற அன்று மாலை முல்லைத்தீவிற்குச் சென்ற அமைச்சர் றிசாட் பதியுதீன் அரச அதிபர், கரைதுறைபற்று பிரதேச செயலர், காணி உத்தியோகத்தர்களை மூடிய அறையில் வைத்து மிரட்டியிருக்கின்றார்.

தமது நடவடிக்கை தொடர்பில் வெளியில் தெரிவித்தவர்கள் யார்? என்று தமக்குத் தெரியும் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் உரிய நேரத்தில் இதற்கான பலனை அனுபவிப்பீர்கள் என்றும் மிகக் கடுமையாக மிரட்டியதுடன் சம்பவம் தொடர்பில் வெளியில் எவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்றும் அச்சுறுத்தியிருப்பதாக அரச செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.