எங்களை ஏன் பார்க்க வந்தீங்க! காங்கிரஸாரிடம் விடுதலையான மீனவர்கள் ஆவேசம்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 19 பேர் இன்று இராமேஸ்வரம் வந்தனர். அவர்களை வரவேற்க வந்த காங்கிரஸாரிடம், ‘நாங்கள் சிறையில் இருந்த போதெல்லாம் எங்களை பற்றி கவலைப்படாமல், இப்போது மட்டும் ஏன் வர்றீங்க’ன்னு ஆவேசமாக பேசினர்.

இராமேஸ்வரத்திலிருந்து கடந்த மாதம் 13ம் தேதி ராஜ், சேவியர் பூண்டி, சூசை, அருளானந்தம் ஆகியோருக்கு சொந்தமான 4 விசைப்படகுகளில் 19 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர்.

இவர்கள் தனுஷ்கோடிக்கும், கச்சதீவுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களையும், படகுகளையும் சிறை பிடித்து சென்றனர்.

இந்த நிலையில் 30 நாள் சிறைவாசத்துக்கு பிறகு 19 மீனவர்களும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். விடுவிக்கப்பட்டு மீனவர்கள் இன்று பகல் 2 மணியளவில் இராமேஸ்வரம் வந்தனர். அவர்களை குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்பு கொடுத்தனர்.

இராமேஸ்வரம் திரும்பிய மீனவர்கள் கூறுகையில் ‘‘கடந்த மாதம் 13ஆம் தேதி காலை 10 மணிக்கு இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க கிளம்பினோம். அன்று பகல் ஒரு மணியளவில் தனுஷ்கோடி கரை தெரிய நம்ம நாட்டு எல்லைக்குள்ள மீன்பிடிச்சுகிட்டு இருந்தோம்.

அப்ப 2 கப்பல்களில் இலங்கை கடற்படை வந்தாங்க. கப்பலில் இருந்தவர்கள் எங்கள் படகில் இருந்த ஜி.பி.எஸ் கருவிகளை எடுத்துகிட்டு ஏன் எல்லை தாண்டி வந்தீங்கன்னு கேட்டாங்க. நாங்க எங்க எல்லைக்குள்ளதான் இருக்குறோம்னு சொன்னோம்.

ஆனா அவங்க அதை நம்பள. உங்கள இங்க வரவிட்டுட்டு உங்க நாட்டு நேவி என்ன செஞ்சுகிட்டு இருக்காங்கன்னு கேட்டுகிட்டே எங்கள ஒவ்வொருத்தரா வரச்சொல்லி முதுகில அடிச்சு தங்களோட கப்பலில் ஏத்திகிட்டு எங்க படகுகளை இலங்கைக்கு இழுத்துட்டு போனாங்க. நாங்க எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவங்க கேக்கல.

அன்னைக்கு சாயங்காலம் அங்குள்ள போலீஸ் ஸ்டேசனில் இருக்க வெச்சாங்க. விசாரணை செய்றோம்கிற பேரில ராத்திரி பூராவும் எங்கள தூங்கவிடல. மறுநாள் காலையில் மன்னார் கோர்ட்டுக்கு கூட்டிட்டு போனாங்க.

கோர்ட்டில் எங்கள முதலில் 22ம் தேதி வரையும், மறுபடி இந்த மாதம் 11ம் தேதி வரையும் சிறையில் வைக்க சொன்னாங்க. எங்கள சிறையில வைக்க சொன்னதும் எங்க படகுகள தனித்தனியா நிறுத்தி வைக்க அனுமதி கேட்டோம்.

ஆனா கடற்படையினரோ, போலீஸ்காரங்களோ அதுக்கு அனுமதிக்கல. எங்க படகுகள ஒன்றோட ஒன்று அருகில் நிக்கிற மாதிரி ஒரே இடத்தில கட்டி வச்சிருத்தாங்க. நேற்று காலை மன்னார் நீதிமன்றத்துக்கு எங்கள கூட்டிட்டு போனாங்க. அங்க இருந்த நீதிபதி எங்களை விடுதலை செஞ்சு உத்தரவிட்டார்.

விடுதலை ஆனவுடன் எங்க படகுகள் இருக்கும் இடத்துக்கு கூட்டிட்டு போக சொன்னோம். ஆனா அவங்க இன்னைக்கு காலைலதான் எங்கள அங்க கூட்டிட்டு வந்தாங்க. அங்க இருந்த படகுகளில் ஒன்றோட ஒன்று மோதி சேதமாயி நின்னுச்சு. இதில் பூண்டியோட படகுக்குதான் அதிக சேதம். எங்க படகுகளில் இரண்டு படகை இயக்க முடியல. அதனால மத்த இரண்டு படகில் பழுதான படகுகளை கட்டி இழுத்து வந்தோம்’’ என்றனர்.

முன்னதாக சிறையில் இருந்து இராமேஸ்வரம் திரும்பிய மீனவர்களை விடுவிக்க அவர்களது குடும்பத்தினர் கை குழந்தைகளுடனும் கண்ணீருடனும் காத்திருந்தனர். போலீஸ், புலனாய்வு அதிகாரிகளின் விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்ட மீனவர்களை அவர்களது குடும்பத்தினர் அழுதவாறே வரவேற்றனர்.

இதுவரை இல்லாத வழக்கமாக சிறையில் இருந்து மீண்ட மீனவர்களை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் துறைமுகத்திற்கு வந்திருந்தனர்.

இராமேஸ்வரம் நகர் காங்கிரஸ் தலைவர் பாரிராஜன் விடுதலையாகி வந்த மீனவர்களுக்கு துண்டு போட முயன்றார். அப்போது சில மீனவர்கள் ‘சிறையில் இருந்த போதெல்லாம் எங்களை பற்றி கவலைப்படாமல், இப்போது விடுதலையாகி வந்தவுடன் எதுக்கு பார்க்க வர்றீங்க.

மீனவர்கள் யாரும் காங்கிரஸ் காரங்ககிட்ட துண்டு வாங்காதிங்கன்னு’’ கோபமாக சத்தம் போட்டனர். இதனை எதிர்பார்க்காத காங்கிரஸார் திகைத்து போயினர்.

ஒருவழியாக அங்கிருந்த மீனவர் சங்க தலைவர்கள் தேவதாஸ், அருளானந்தம், சேசு, எமரிட் ஆகியோர் மீனவர்களை சமாதானப்படுத்தினர். இதன் பின்னர் காங்கிரஸார் மீனவர்களுக்கு துண்டு போர்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published.