யாழ்.பல்கலை பொருளியல் துறை விரிவுரையாளரை பதவி நீக்க மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்.பல்கலை பொருளியல் துறை விரிவுரையாளரை பதவி நீக்க மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்.பல்கலைக்கழக மாணவிகளுடன் பாலியல் ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்ள முயன்ற பொருளியல் துறை விரிவுரையாளர் செ.இளங்குமரனை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.

இன்று காலை யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் இளங்குமரனது கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

பெருமளவான மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தருக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கலைப்பீடம் சார்பில் அவசர கோரிக்கை என்னும் பெயரில் இம்மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாணவர்களது இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக யாழ்.பல்கலைக்கழக சூழலில் பெருமளவான இராணுவப் புலனாய்வாளர்கள் சூழ்ந்திருந்தனர்

arpaddam_jaffna_student_001arpaddam_jaffna_student_002arpaddam_jaffna_student_003arpaddam_jaffna_student_004

Leave a Reply

Your email address will not be published.