பருத்தித்துறையில் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கப்பாதை பற்றிய பல தகவல்கள் வெளியாகியிருந்தது இது உண்மையில் சுரங்கம் தானா? அல்லது குழியா என பல இணையங்கள் சந்தேகம் வெளியிட்டது.
இதன் உண்மையை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை ,உண்மையில் இது விடுதலைப்புலிகளினால் தோண்டப்பட்ட சுரங்கப்பாதை என்பதுதான் உண்மை. இச் சுரங்கப்பாதை 1987 ஆரம்பப்பகுதிகளில் தலைவரின் நேரடி மேற்பார்வையில் அன்று புலிகளுக்கு மிகவும் சவாலாக இருந்த பருத்தித்துறை இராணுவ முகாமை தாக்கியழிக்கும் திட்டத்துடன் தலைவரின் நேரடி மேற்பார்வையில் குறிக்கப்பட்ட தினத்திற்கு முன்பு இச் சுரங்கப்பாதை இலக்கை அடையவேண்டும் என முடிவு எடுக்கப்பட்டு, இதற்கு குறிப்பிட்ட போராளிகளே இரவு பகலாக இதை தோண்டினார்கள். இதற்காக ஒரு அணி மில்லர் தலைமையில் இராணுவத்தின் கட்டுப்படுப் பகுதியில் இருந்த காங்கேசன்துறை சீமந்துத் தொழில்ச்சாலையில் இதற்கான சுரங்கம் தோண்டும் ஆயுதங்களை கொண்டுவந்தனர். இச் சுரங்கப்பாதை அதன் இலக்கை பாதித்தூரம் வரை குறிக்கப்பட்ட நாட்களில் சென்றடைந்தது ,பின்னர் புலிகள் தொடர்ந்து செல்லும் போது பாரிய பாறையை எதிர் நோக்க நேரிட்டது இருந்தும் அவர்கள் விடாமுயற்சியுடன் மிகவும் கடினமான பாறையை இராணுவத்திற்கு ஓசை வராது தோண்டினர். எதிர்கொண்ட பாறையை கடந்து செல்ல மாற்றுவழி அமைக்க திட்டம் போடப்பட்டது அதற்கு அமைய இச் சுரங்கப்பாதை தோண்டபட்டிருக்கும் போது ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் Operation Liberation தாக்குதல்ஆரம்பிக்கப்பட்ட போது இது அவசரமாக இனங்கானப்படாது மூடப்பட்டது என்பதை அறியமுடிகிறது